கோல் கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷயிட் ஹப்ரிடி, அவசர தேவை நிமிர்த்தம் நாடு திரும்பியுள்ளார்.
தனது தனிப்பட்ட அவசர தேவைக்காகவே தான் வீட்டை நோக்கி பயணிப்பதாக ஷயிட் ஹப்ரிடி தனது டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
தனது நிலைமைகள் சரி வந்தவுடன், லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் உடனடியாக கலந்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு திரும்பும் ஷயிட் ஹப்ரிடி, லங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Unfortunately I have a personal emergency to attend to back home. I will return to join back my team at LPL immediately after the situation is handled. All the best.
— Shahid Afridi (@SAfridiOfficial) December 2, 2020