நாட்டில் டெல்டா திரிபு வேகமாக பரவிச் செல்வதால் இலங்கையில் புதிய திரிபு உருவாகுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வைரஸ் அதிகமானோரிடையே பரவும் பட்சத்தில் அவை மரபணுவை மாற்றிக்கொள்வதால் புதுப்புது திரிபுகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளன.
இதனால், இலங்கையில் டெல்டா புதிய திரிபு உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் மாத்திரம் காணப்பட்ட போதிலும் தற்போது அதிக திரிபுகள் உருவாகியுள்ளதால், இலங்கையிலும் அவ்வாறு புதிய திரிபு உருவாகுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜவந்திரவிடம் தமிழன் செய்திப்பிரிவு வினய போது, நாட்டில் டெல்ட்டா திரிபு வேகமாக பரவுவதால் புதிய திரிபுகள் உருகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இலங்கையில் மாத்திரமல்லாது முழு உலகத்திலும் இவ்வாறு புதிய திரிபுகள் உருவாகும் நிலைமையே காணப்படுகின்றன. (TrueCeylon)
Discussion about this post