தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலங்களில் இடம்பெறக்கூடிய சேவைகள் குறித்து புதிய திருத்தங்களுடனான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள்,
அரச அலுவலகங்கள்,
விவசாயத் துறையினர்,
விமான நிலையங்கள்,
துறைமுகங்கள்,
இலங்கை முதலீட்டுச் சபை,
ஏற்றுமதி அபிவிருத்தி சபை,
அரச மற்றும் தனியார் நிறுவன கணக்கியல் பிரிவினர் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகளில் கடமைகளுக்கு வருவோர் குறித்து அவர்களின் அலுவலகத் தலைவர்கள் தீர்மானங்கள் மேற்கொள்ளவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொடுக்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என இராணுவத்தளபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post