கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பி.சி.ஆர் மற்றும் அன்டீஜன் பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த புதிய வழிகாட்டி, வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
- சிகிச்சைகளுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் அல்லது வைத்திய அதிகாரி ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
- மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், பெறுபேறு கிடைக்கும் வரை, மாதிரியை பெற்றுக்கொண்ட நபரை வீட்டிலோ அல்லது நிறுவனத்திலோ தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்குதல்
- குறித்த நபர் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்படும் பட்சத்தில், அது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் மற்றும் நோயாளர் ஆகியோருக்கு தெளிவூட்ட வேண்டியது வைத்தியசாலையிலுள்ள அதிகாரிகளின் பொறுப்பு.
- இந்த நோயாளர், பொறுப்பு கூறும் வைத்தியரின் பரிந்துரைகளுக்கு அமைய, அனுமதி வழங்கப்பட்டுள்ள கொவிட்-19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, தனியார் வைத்தியசாலைகள் இந்த நடைமுறைகளை மீறி செயற்படுமாக இருந்தால், கொவிட்-19 தொடர்பிலான பரிசோதனைகளை நடத்துவதற்கான அனுமதி சுகாதார அமைச்சினால் ரத்து செய்யப்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Discussion about this post