இலங்கையில் தொடர்ச்சியாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமையினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு கொவிட் கொத்தணி உருவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி, விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் நூற்றுக்கணக்கான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
மக்கள் அதிகளவில் ஒன்றும் கூடும் இடங்கள் மற்றும் சமூக இடைவெளியை பேண முடியாத இடங்களில் இந்த கொத்தணி உருவாவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post