இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்துடன் இணைந்ததான சமையல் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்ள அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுகர்வோருக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை வழங்கும் நோக்குடன் புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நுகர்வோரின் கேள்வியில் 5 வீதமான எரிவாயுவை உற்பத்தி செய்து வருகின்றது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு சமமாக விநியோகித்து வருகின்றது.
இந்த நிலையில், புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை, நிர்மாணிக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், சப்புகஸ்கந்த பகுதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எரிசக்தி அமைச்சின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், இலங்கை எரிவாயு கேள்வியில், 20 சதவீத எரிவாயுவை உற்பத்தி செய்வதற்கான இயலுமை, இந்த திட்டத்தின் ஊடாக முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post