நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவ்வாறு போலி தகவல்களை பகிர்வோர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான போலி தகவல்களின் ஊடாக மக்களை சிலர் தவறான வழிக்கு கொண்டு செல்வதாகவும், மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவது சட்டத்திற்கு முன்பாக தவறு எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
போலி தகவல்களை பகிர்வோர் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
Discussion about this post