தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸானது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மிக வேகமாக ஏனையோருக்கு பரவக்கூடிய தன்மை கொண்டது என்றும் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் காரணமாக பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைபிடிப்பதோடு, முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் எனவும் குறிப்பிட்டார்.
நண்பர்களுடன் பேசும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post