இலங்கையில் இதுவரை 61 கொவிட் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, இரத்மலானை, மஹாபாககே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை ஆகிய பகுதிகளில் புதிய டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post