இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை இன்று தாண்டியது.
இன்றைய தினம் புதிதாக 2,280 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதன்படி, நாட்டில் முழுமையாக பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 201,534 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, புதுவருட கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் நேற்றைய தினத்துடன் ஓரு லட்சத்தை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post