மொனராகலை நகரத்தை இன்று முதல் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ஆர். எம். ரத்னவீர தெரிவித்தார்.
மொனராகலை பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கொரோனா தொற்று தடுப்புக் குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
அந்த தீர்மானத்திற்கு இணங்க தேசிய பாடசாலையில் இருந்து கச்சேரி சந்தி வரையிலும் உள்ள ஒரு பகுதி வர்த்தக நிலையங்கள் மூடப்படவுள்ளதென கொவிட் தடுப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மொனராகலை நகரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post