மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய கொவிட் கொத்தணியொன்று உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், குறித்த வைத்தியசாலையில் பணிப்புரியும் சிற்றூழியர்கள் இன்று வைத்தியசாலை முற்றத்தில் ஒன்று திரண்டுள்ளனர். (TrueCeylon)
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியை கடைபிடிக்காது, அனைவரும் ஒன்று (TrueCeylon) திரண்டிருந்ததாக எமது ட்ரூ சிலோன் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதனால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குள் புதிய கொவிட் கொத்தணியொன்று உருவாவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர் என எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முற்றத்தில் இன்றைய தினம் ஒன்று திரண்ட சிற்றூழியர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post