ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கேல் பேச்லெட்டை இலங்கைக்கு அழைப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தொடர்பில் ஐ.நாவில் அவர் வெளியிட்ட தீர்மானம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது.
அந்த வகையில் முறையான அழைப்பிதழ் ஒன்றை அனுப்ப அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆங்கில ஊடகத்திற்கு அறிவித்தார்.
இவர் வருகையின் மூலம் நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து பேச்லெட் முதல் மதிப்பீட்டைப் பெற முடியும் என நம்பப்படுகின்றது.
இந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்திய அவர், எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post