தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு அமைக்கப்பட்ட ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மதுரை அருகில் இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதுரை திருமங்கலம் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கர் நிலப் பரப்பில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது,
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கான அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் இரண்டும் வெண்கலத்தினால் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு 50 லட்சம் இந்திய ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post