மீரிகம பொதுச் சந்தையிக்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்த கொலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று (10) மாலை 4.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரும்பு கம்பி ஒன்றினால் தாக்கியதில் 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post