அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்துகளை வீடுகளுக்கே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நடவடிக்கைககள் இன்று (04) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாதுள்ள நோயாளர்களின் நலன் கருதி சுகாதார அமைச்சு மற்றும் தபால் அலுவலகங்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.
இதனடிப்படையில் அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சைகளுக்காக பதிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை வெவ்வேறாக பொதியிட்டு தபால் திணைக்களத்தினூடாக வீடுகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நோயாளிகளால் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள முகவரிகளுக்கே மருந்துகள் விநியோகிக்கப்படுவதால் முகவரிகளில் மாற்றம் ஏதும் இருப்பின் அது குறித்து வைத்தியசாலைக்கு அறிவிக்குமாறும் சுகாதார அமைச்சு நோயாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்த மேலதிக தகவல்களை 0720 720 720 அல்லது 0720 606 060 எனும் தொலைபேசி இலக்கங்களூடாக அறிந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post