கொழும்பு நகர வீதியின் மாவனெல்லை கணேதென்ன பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.(TrueCeylon)