கொஹுவளை பகுதியில் கார் ஒன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் சடலம் யாருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மரபணு பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
இவர் கொஹூவளை பா(த்)திய மாவத்தையை சேர்ந்த 33 வயதான நசார் மொஹமட் என்ற இளைஞனுடையது என்பது மரபணு பரிசோதனைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளும், அவரின் பெற்றோரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
33 வயதான நசார் மொஹமட் என்ற குறித்த வர்த்தகர் பயணித்த கார் , கடந்த 10 ஆம் திகதி இரவு தீப்பற்றியிருந்தது.
பின்னர் அதிலிருந்து எரிந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்தநிலையில், மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் குறித்த சடலம், 33 வயதான வர்த்தகரினுடையது என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post