லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குப்பற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று நடத்தப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த போட்டிகளில் விளையாடவுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
முழுமையாக சுகாதார வழிகாட்டலின் கீழ் இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
It’s #PCR testing time for 🇱🇰 Cricketers. #LPLT20 🏏#LankaPremierLeague #LPL pic.twitter.com/RalYoTfER0
— DANUSHKA ARAVINDA (@DANUSHKAARAVIND) November 11, 2020