லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய கொழும்பு கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கெண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு 220 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் இரண்டு அணிகளும் சமமான ஓட்டங்களை பெற்ற நிலையில், மேலதிக ஒரு ஓவர் (சுப்பர் ஓவர்) இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டன.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு 17 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கெண்டி டஸ்கர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி, 12 ஓட்டங்களை மாத்திரமே பெற்று முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.