இலங்கை :- ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்காக ஹோட்டல் கட்டணமாக நான்கரை கோடி ரூபாவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களின் போது, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உணவு மற்றும் ஏனைய செலவீனங்களுக்காக ஷெங்கிரில்லா ஹோட்டலுக்காக 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஊவா மாகாண சபை 500 லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இந்த விடயம் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த போட்டியின் ஊடாக இலாபம் கிடைத்துள்ளாக தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எந்தவிதத்திலும் நட்டம் ஏற்படவில்லை என உறுதியளித்துள்ளார். (TrueCeylon)
News Source :- NewsCenter
Discussion about this post