லங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கான காணொளி பாடலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் எல்.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில், லங்கா பிரிமியல் லீக் போட்டிகளுக்கான காணொளி பாடல் யூடியூப்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ள இந்த பாடல், மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.