அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் நாடு “லொக்டவுன்” (முற்றிலும் மூட) செய்யப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால், ஒரு “லொக்-அப்” (மனிதர்களின் பயணத்தை கட்டுப்படுத்தல்) வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் மூத்த பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில் தனிப்பட்ட பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில், வைரஸ் பரவும் அனைத்து இடங்களும் மூடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தனிநபர் நடமாட்டம் இவ்வாறு அதிகளவில் இருந்தால் கொரோனா பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாது.
மாகாண பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களைத் தவிர அனைத்து மக்களும் தங்கள் விருப்பப்படி பயணம் செய்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
அடுத்த இரண்டு வாரங்களில் அரசும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என பேராசிரியர் அர்ஜுன டி சில்வா சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்தை கட்டுப்படுத்தாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினம் என்று அவர் மேலும் கூறினார். (TrueCeylon)
Discussion about this post