கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இறக்குவானை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை பூட்டுவதற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாளை (18) முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வங்கிகள், அத்தியாவசிய மொத்த விற்பனை நிலையங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குவானையில் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக பிரதேச சுகாதார பரிசோதகர் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார். (TrueCeylon)
Discussion about this post