நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை அலுவலகத்திற்கு கீழ் இயங்கும் அக்கரபத்தனை – டயகம வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
டயகம வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
இந்த வைத்தியருடன் நெருங்கி பழகிய 2 வைத்தியர்கள் மற்றும் 35 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டயகம பகுதியிலுள்ள மக்கள் அவசர சிகிச்சைகளுக்காக அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு செல்ல முடியும் என லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Discussion about this post