Sunday, February 5, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

லீசிங் செலுத்த தவறியவர்களின் வாகனங்களை கொண்டு செல்ல முடியாது – கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஊடக சந்திப்பு

ரக்சிகன் by ரக்சிகன்
October 25, 2022
in இலங்கை, கொவிட்-19, பிரதான செய்தி
Reading Time: 1 min read
வாகனம் தொடர்பிலான விசேட அறிவிப்பு வெளியானது
786
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
ADVERTISEMENT

லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறி, நிர்கதிக்குள்ளாகியுள்ள நபர்களின் வாகனங்களை சீசர்கள் (வாகனங்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும் நபர்கள்) வலுக்கட்டாயமாக கொண்டு செல்வதற்கு எந்தவித அதிகாரங்களும் அவர்களுக்கு கிடையாது என ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று (ஒக்.24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு – என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊடக சந்திப்பிற்கு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

”எந்தவொரு ஊடக இவ்வாறு நடத்தப்பட்டிருக்காது. விசேட பொலிஸ் பாதுகாப்பை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். ஊடக சந்திப்பிற்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்பட்டமையானது, லீசிங் மாஃபியா எந்தளவிற்கு கொடூரமானது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்;” என ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க தெரிவிக்கின்றார்.

லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறும் பட்சத்தில், அதனை சீசர்களுக்கு கொண்டு செல்ல சட்டத்தில் எந்தவித அதிகாரமும் கிடையாது என அவர் கூறுகின்றார்.

சுற்று நிரூபத்திலும் அவ்வாறான அதிகாரங்கள், சீசர்களுக்கு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளதாக கூறிய அவர், மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் லீசிங் நிறுவனங்களுடன் டீல் செய்வதாக தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை லீசிங் நிறுவனங்களின் சீசர்களுக்கு வழங்குவதை முடியுமானளவு தவிர்த்துக்கொள்ளுமாறும் ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)

Previous Post

மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட ஜனாதிபதி செயலணி – பொங்கலுக்கு மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

Next Post

முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணம் குறைக்கப்படுமா?

Next Post
முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணம் குறைக்கப்படுமா?

முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணம் குறைக்கப்படுமா?

Flash News

  • அரச ஊழியர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த தடையா?

    கையடக்கத் தொலைபேசிகளுக்கு கடுமையான சட்டம் l காரணம் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- பெட்ரோல் விலை சடுதியாக அதிகரிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • அரச ஊழியர்கள் குறித்து அரசு அதிரடி தீர்மானம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் சடலம் – வெளியான தகவல்கள் (முழு விபரம் இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • 2022 (2023) G.C.E (O/L) பரீட்சார்த்திகளுக்கு இன்று முதல் புதிய வழிமுறை ஆரம்பம் l 28ம் திகதி வரை மாத்திரமே

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved