மேல் மாகாணத்தின் (கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் தவிர்ந்த) அனைத்து பகுதிகளிலும் உள்ள காணிகளின் பெறுமதி 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் 74 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் முன்னணி காணி விற்பனை இணையத்தளமொன்றினால் நடத்தப்பட்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த இணையத்தளம் வருடாந்த காணி பெறுமதிகள் அடங்கிய விலை பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
வருடாந்த அடிப்படையில் கணக்கிடும் போது, 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் சாதாரண காணியொன்றின் விலை 15 வீதத்தால் அதிகரித்து சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
முதலீட்டாளர் ஒருவர் காணியொன்றிற்கான முதலீட்டை செய்து, அவர் அந்த காணியை 4 முதல் 5 வருடங்கள் வைத்திருப்பாராயின், அவரது ஆரம்ப முதலீட்டை போன்று மூன்று மடங்கு பெறுமதியில் அதனை விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post