கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் 16 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 12 கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய 164 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, 4 பிரதான பாடசாலைகளின் 5 ஆசிரியர்களும், 7 பாடசாலை மாணவர்களும் இவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய நான்கு தொற்றாளர்களும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Discussion about this post