கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண், தனிமையில் வசித்துவந்த நிலையில் நேற்று (02) பிற்பகல் 2.30 மணி அளவில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வேலாயுதம் பரமேஸ்வரி (வயது 74) என்பவரே கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தவறி வீழ்ந்தாரா? அல்லது தற்கொலையா? கொலையா? என தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post