டுபாயில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிழலுலக தலைவர்களில் ஒருவரான “கெசேல்வத்த தினுக”வின் பூதவுடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்ததுடன், அவரது பூதவுடல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் நிழலுலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்ட தினுக, வேறு பெயரில் வெளிநாட்டில் வசித்து வந்திருந்தார்.
இந்த நிலையில், DNA பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், தினுகவின் பூதவுடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post