வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்கு, விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post