கண்டி-உடுவெல பகுதிளில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த இளைஞனை வீதிக்கு தள்ளிவிட்டதாகவும்,
இதன்போது வந்த பஸ் குறித்த இளைஞன் மீது ஏறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதை குறிப்பிட்டார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் உடுவெல பகுதியில் வசிக்கும் 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பஸ் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post