கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 476ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இறுதியாக 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தோர் தொடர்பான விபரங்கள்
01.கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர், பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
02.கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர், பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 26ம் திகதி உயிரிழந்துள்ளார்.
03.புலத்கொஹுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்ணொருவர், கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடந்த 11ம் திகதி உயிரிழந்துள்ளார்.
04.கண்டி பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
05.பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post