கண்டி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு 9.56 அளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கண்டி நகரிலுள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு இளைஞர்கள், தமது பணியை நிறைவு செய்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வீதியின் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது, காரொன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
விபத்து இடம்பெறும் காட்சிகள் அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
விபத்தை அடுத்து, காரின் சாரதி, பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் (TrueCeylon)
Discussion about this post