இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
தான் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களும் தமது இராஜினாமா கடிதத்தை, நிதி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்ததாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் பயன்பாடுகள் குறித்து இந்த ஆணைக்குழு ஆராய்ந்து வந்திருந்தது.
இந்த நிலையில், பொது பயன்பாட்டு ஆணைக்குழு கலைக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலாளரினால், நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டது. (TrueCeylon)