திருகோணமலை – கந்தளாய் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை – சீன துறைமுக விமான முகாமிலிருந்து பயணித்த PT-06 பயிற்சி விமானத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக விமானப் படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள விமானம், சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளதாகவும் விமானப்படை குறிப்பிடுகின்றது.
கந்தளாய் சூரியபுர பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, கட்டுப்பாட்டு அறையுடன் இறுதியாக தொடர்பு காணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பகுதியில் வைத்தே இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து முன்னெடுக்கின்றனர். (TrueCeylon)