நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கொட்டகலை CLF விளையாட்டு மைதானத்தில் இ.தொ.காவின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இடம்பெற்றதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போட்டி தனது தலைமையில் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த போட்டிகளில் பங்குப்பற்றிய அணிகளுக்கு பரிசில்களை தான் வழங்கி வைத்ததாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள தருணத்தில், இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என பலரும் தமது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.
எனினும், இந்த கிரிக்கெட் போட்டி பயணக் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்டது எனவும், பரிசில்களும் அந்த சந்தர்ப்பத்திலேயே வழங்கி வைக்கப்பட்டவை எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள தருணத்தில், திகதியை குறிப்பிடாது இவ்வாறான பதிவுகளை இடுவது, மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. (TrueCeylon)
Discussion about this post