கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் கடந்த இரண்டு நாட்களில் 20 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த இரு தினங்களில் கொரோனாவினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று மூன்றாவது நாளாகவும் அடக்கம் செய்யப்படும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
இன்று மதியம் 2 மணிவரை நான்கு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று மாலையும் ஜனாஸாக்கள் வரவுள்ளதாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் கடமையாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
Discussion about this post