தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி மது விருந்து நடத்தியதற்காக யாழ்ப்பாணம் – அரசடி பகுதியில் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை குறித்த நபர்களை கைது செய்திருந்தனர்.
சந்தேகநபர்களை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜூன் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தலின் கீழ் வைக்குமாறும் நீதவான் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Discussion about this post