இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் கீழ், சமையல் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்ளும் புதிய நிறுவனமொன்றை ஆரம்பிக்கும் முயற்சிகளில், தான் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனக்கு எந்தவொரு எரிவாயு நிறுவனமும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், இவ்வாறான போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post