ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கிறார்.
எனினும், சுகாதார பிரிவின் ஆலோசனைகள் மற்றும் அனுமதியை பெற்றே, திருமண நிகழ்வுகளை நடத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, திருமண நிகழ்வுகளை தவிர வேறு எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்த முடியாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
Discussion about this post