கொரோனாவால் உயிரிழந்தவர்களை உடல்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் இன்று போராட்டங்களை நடத்த உள்ளனர்.
எதிர்ப்பு பேரணி ஒன்றை அவர்கள் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரணைதீவு என்பது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். 108 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர்.
இதேவேளை இரணைதீவில் வசிப்பவர்கள் யாரும் இதுவரை COVID-19ஆல் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post