கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு போராளிகளுக்கு எதிரான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதாக ஈரானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அலி ஷம்கானி இன்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை பிராந்தியத்தில் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை பலப்படுத்துகிறது மற்றும் விரிவுபடுத்துகிறது என்று தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு சக்திகள் மீதான தாக்குதல் ஒரு புதிய பயங்கரவாதத்தின் தொடக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை புதுப்பிக்க அமெரிக்காவின் திட்டத்தை எதிர்கொள்வோம்” என்று கூறினார்.
சிரியாவிலுள்ள ஈரானின் ஆதரவு பெற்ற படைத்தளங்கள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்க ராணுவம் தனது முதல் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது.
இதில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். ஈரான் ஆதரவு பெற்ற படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கருதுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக ஒரு தாக்குதலை நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
Discussion about this post