இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) போட்டிகளை இடைநிறுத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் மிக வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் தொற்று, ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ள சிலருக்கும் ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ள சில அணிகளின் வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலுள்ள நிர்வாக உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, ஐ.பி.எல் போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post