சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை இன்றிரவு இலங்கையர்களுக்கு பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இன்றிரவு 7.05 முதல் 7.12 வரையான காலப் பகுதிக்குள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நேரடியாக இலங்கையர்களுக்கு பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைநோக்கு கருவியின்றி, வெற்றுக்கண்களினால், இலங்கையில் எந்தவொரு இடத்திலிருந்தும் இந்த நிலையத்தை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் பயணிக்கின்றது.
புவி ஈர்ப்பு சக்திக்கு ஏற்ப, இதன் வேகம் மாற்றமடையும் என தெரிய வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post