ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் சூழ்ந்துள்ள நிலையிலேயே, அந்த நாட்டு ஜனாதிபதி தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானின் உப ஜனாதிபதி அம்ருல்லா சாலேயும், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளும், தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாகாண ஆளுநர்கள், தமது அதிகாரங்களை தாலிபான்களிடம் கையளித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே, அந்த நாட்டு ஜனாதிபதி, நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
Discussion about this post