மூன்றாம் இணைப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாள், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட சம்பவங்கள் குறித்தும் அசாத் சாலியிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இரண்டாம் இணைப்பு
கைது செய்யப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலியிடம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அசாத் சாலியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (TrueCeylon)
Discussion about this post