சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் மக்கள் உரிய வகையில் செயற்பட தவறும் பட்சத்தில், கொவிட் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் மக்களை நூறு வீதம் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
புதுவருட காலப் பகுதியில் மக்கள் செயற்படும் விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் நிகழ்வுகளை சிறியளவில் ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் குழுக்களாக இணைந்து நடத்தும் விளையாட்டு போட்டிகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
சுகாதார நடைமுறைகளின் கீழ், நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் குறித்து, எதிர்வரும் தினங்களில் சுகாதார அதிகாரிகள் தெளிவூட்டல்களை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என காதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post