நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரமளவில் குறைவடையும் என எதிர்பார்க்க முடியும் என பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுவது மிகவும் முக்கியமானது என அவர் கூறுகின்றார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், குறுக்கு வீதிகளை பயன்படுத்தி சிலர் ஒன்று கூடுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post