இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை தாண்டியது.
இந்தியாவில் கொவிட் தொற்றினால் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 19 ஆயிரத்து 578 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தொற்று தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 356 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக நாளொன்றுகு;கு சுமார் 3 லட்சத்தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றது.
உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலான நாடாக இந்தியா தற்போது மாறியுள்ளது.
இந்த நிலையில், நாளொன்றில் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
Discussion about this post